உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விளக்கொளியில் ஜொலித்த அயோத்தி: சரயு நதிக்கரையில் கின்னஸ் உலக சாதனை UP sets 2 Guinness World Record

விளக்கொளியில் ஜொலித்த அயோத்தி: சரயு நதிக்கரையில் கின்னஸ் உலக சாதனை UP sets 2 Guinness World Record

தீபாவளி பண்டிகையை ஒட்டி உபி மாநிலம் அயோத்தியில், மாநில சுற்றுலாத்துறை சார்பில் மாபெரும் தீப உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று, 26 லட்சத்து 17 ஆயிரத்து 215 அகல் விளக்குகள் ஏற்றினர். அயோத்தி ராமர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள சரயு நதியின் ஒன்பது படித்துறைகளிலும், விளக்குகள் ஏற்றப்பட்டு அயோத்தி முழுதும் விளக்கொளியில் ஜொலித்தது. இதன் மூலம், ஒரே நேரத்தில் அதிப்படியான விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. உபி முழுவதும் ஒன்றரை கோடி விளக்குகள் ஏற்றபட்டதாக மாநில சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. அதே போல், சரயு நதிக்கரையில், ஒரே நேரத்தில் 2,128 வேத பண்டிதர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்ற ஆரத்தி நிகழ்ச்சி இடம் பெற்றது. ஒரே நேரத்தில் அதிக நபர்கள் ஆரத்தி எடுத்ததற்கான கின்னஸ் உலக சாதனையும் படைக்கப்பட்டது. இந்த இரண்டு உலக சாதனைகளுக்கான சான்றிதழை, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அதிகாரிகள் வழங்கினர். அதைப் பெற்றுக் கொண்ட ஆதித்யநாத், இச்சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அக் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை