விஏஓ தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்த பெண் | VAO | Vadakkanandal
என் ஊரிலேயே நீ வேல பார்க்குறியா? பெண் விஏஓ மீது சாணி வீசிய சங்கீதா கள்ளக்குறிச்சி வடக்கனந்தல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் தமிழரசி. இவருடன் அதே கிராமத்தை சேர்ந்த சங்கீதா கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அலுவலக பதிவேடுகளை சங்கீதா வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார். தட்டி கேட்ட கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டினார். இது குறித்த புகாரின் பேரில் கிராம உதவியாளர் சங்கீதா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த ஆத்திரத்தில் செவ்வாயன்று கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற சங்கீதா அங்கு பணியில் இருந்த தமிழரசியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அவரது தலைமுடியை இழுத்து தாக்கி, உன்னால தான் எனக்கு வேலை போச்சு. என்ன வேலைவிட்டு நிறுத்திட்டு நீ எப்படி என் ஊரில் வேலை பார்க்கலாம் என பேசி இருக்கிறார். திடீரென பையில் கொண்டு வந்திருந்த சாணத்தை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி முகத்தில் வீசியுள்ளார் சங்கீதா. அலறல் சத்தம் கேட்டு வந்த ஊர்மக்கள் தமிழரசியை மீட்டு ஆம்புலன்ஸ்ஸில் ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி மீது சாணம் வீசப்பட்ட போது அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மீதும் பட்டு அவை நாசமாகி இருக்கிறது.