/ தினமலர் டிவி
/ பொது
/ 2026 தேர்தலில் களமிறங்கும் நடிகர்களின் வாரிசுகள்! Vijay | TVK | DMK | Vishal | Kamalhasan
2026 தேர்தலில் களமிறங்கும் நடிகர்களின் வாரிசுகள்! Vijay | TVK | DMK | Vishal | Kamalhasan
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மகள் ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா உள்ளிட்டோர் சட்டசபை தேர்தலில் களம் இறங்க உள்ளனர். த.வெ.க தலைவர் விஜய்க்கு எதிராக, நடிகர் விஷாலை களமிறக்க, தி.மு.க. தரப்பில் ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து ஹீரோ அந்தஸ்து கொண்ட நடிகரை களமிறக்க, தி.மு.க. முடிவு செய்துள்ளது. தி.மு.க.வில் திரை நட்சத்திரங்கள் பட்டியலில், துணை முதல்வர் உதயநிதி, வாகை சந்திரசேகர், சின்னத்திரை நடிகர்கள் போஸ் வெங்கட், வாசு விக்ரம் போன்றோர் உள்ளனர்.
ஆக 11, 2025