வயநாட்டில் சரியாக 100 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் | Wayanad | Landslide
வயநாடுக்கு வரலாறு காட்டும் அறிகுறி? இதே போலவே 1924 ஜூலை பேரதிர்ச்சி டிஸ்க்: வயநாட்டில் சரியாக 100 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் | Wayanad | Landslide கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 400க்கும் மேல் அதிகரித்துள்ளது. இன்னும் மீட்பு பணி நடக்கிறது. பல கிராமங்கள் சிதைந்தும், வீடுகள் இருந்த தடயமே இல்லாமல் போயிருக்கிறது. ஆறு அறிவு மனிதனை தேடி ஐந்தறிவு ஜீவன்கள் வரை தவிக்கும் காட்சிகள் மனதை உருக வைக்கிறது. இப்படிப்பட்ட பேரிடர் நடக்க மூல காரணமாக ஒரு சம்பவம் நூறு வருடங்களுக்கு முன் நடந்துள்ளது. 1924 ஜூலை மாதம் கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. திருச்சூர், எர்ணாகுளம் முதல் இடுக்கி, கோட்டயம் வரை மூழ்கியது. வெள்ளத்தால் கரிந்திரி மலை என்ற பெரிய மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு மூணாருக்கான ரோடு மொத்தமாக போனது.