கேரளாவில் இடைத்தேர்தல் பிரசாரம் சுறுசுறுப்பு Wayanad bye election| Navya haridos | Sathayan| CPI| BJ
2024 லோக்சபா பொதுத்தேர்தலில், கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் இரண்டிலும் வெற்றி பெற்றார். ஏதேனும் ஒரு தொகுதியில் தான் எம்பியாக நீடிக்க முடியும் என்ற சட்ட விதியால், ரேபரேலியை தேர்ந்தெடுத்த ராகுல், வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வயநாடு தொகுதியில் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுலின் தங்கை பிரியங்கா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று மிப் பெரிய அளவில் ரோடு ஷோ நடத்தி, பிரியங்கா வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அண்ணன் ராகுல், தாய் சோனியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வயநாட்டில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மொகேரி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த முறை வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் பிரதமர் வேட்பாளர் எனச் சொல்லி இங்கு போட்டியிட்டார். மக்கள் அவரை நம்பி ஓட்டளித்தனர். ஆனால் தேர்தலுக்குப் பின் அவர் தொகுதியை கைவிட்டார். வயநாட்டிற்கு இடைத் தேர்தல் காங்கிரசால் திணிக்கப்பட்டது. எனவே மக்கள் இம்முறை காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கமாட்டார்கள் என சத்யன் மொகேரி கூறினார். பாஜ சார்பில் போட்டியிடும் நவ்யா ஹரிதாசும் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.