உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாட்டை உருக வைத்த பாட்டியின் உண்மை காதல் | wayanad landslide | wayanad elderly woman | chooralmal

வயநாட்டை உருக வைத்த பாட்டியின் உண்மை காதல் | wayanad landslide | wayanad elderly woman | chooralmal

மொத்த நாட்டையும் உலுக்கியது வயநாடு நிலச்சரிவு. முண்டக்கை ஊர் இருந்த தடம் இன்றி அழிந்து விட்டது. சூரல்மலை மற்றும் அட்டமலையின் ஒரு பகுதி அப்படியே சரிந்து விட்டது. 1200 வீடுகளை நிலச்சரிவு விழுங்கி விட்டது. இதுவரை 400 பேர் சடலம் கிடைத்து இருக்கிறது. இன்னும் 150 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. முண்டக்கை, சூரல்மலை, அட்டமலையில் உயிர் தப்பிய மக்கள் ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு நடந்த சுற்றுவட்டார பகுதி முழுதும் மரண ஓலம் கேட்கிறது. முகாம்களில் சோகம் பரவிக்கிடக்கிறது. இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் நிலச்சரிவில் உயிர் தப்பிய பாட்டியின் பெருங்காதல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பாட்டிக்கு வயது 65. தன் கணவன் மீது தீராத காதல். கணவருக்காக அவர் செய்த காரியம் தான் இப்போது வயநாட்டை நெகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து இருக்கிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் 3வது நிலச்சரிவு தாக்கிய சூரல்மலையில் தான் கணவருடன் பாட்டி வசித்து வந்தார்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !