உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தினகரனுடன் கூட்டணி பேசிய நிர்வாகியை கண்டித்த விஜய்! | Vijay | TVK | Arunraj | TTV Dhinakaran | AMMK

தினகரனுடன் கூட்டணி பேசிய நிர்வாகியை கண்டித்த விஜய்! | Vijay | TVK | Arunraj | TTV Dhinakaran | AMMK

அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரனிடம் கூட்டணி பேச்சு நடத்திய, த.வெ.க. மாநில நிர்வாகி அருண்ராஜை, விஜய் கண்டித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து த.வெ.க. வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க. துவங்க பக்கபலமாக இருந்த கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலர் அருண் ராஜ், ஐ.ஆர்.எஸ். பதவியில் இருந்து விலகியவர். பொதுச்செயலர் ஆனந்துக்கு இணையாக, அருண்ராஜுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. சமீபத்தில் விஜய்க்கு தகவல் தெரிவிக்காமல், அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரனிடம் கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை