EVM மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை | Evm | EC | Rajeev Kumar
மகாராஷ்டிரா தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஓட்டு மிஷின்கள் மீது குற்றம் சாட்டின. முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறின. கடந்த காலங்களிலும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையம் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுகளுக்கு மத்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பதில் அளித்து டில்லியில் கூறியதாவது - இந்திய வாக்காளர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். சமீப தேர்தல்களில் இளைஞர்கள் அதிக அளவில் வந்து வாக்களிக்கின்றனர். ஜனநாயகம் ஒரு அழகான தோட்டம், அதை உங்கள் வாக்குகளால் அலங்கரித்துக் கொண்டே இருங்கள். ஓட்டளிப்பதில் நாங்கள் புதிய சாதனை ஏற்படுத்தி உள்ளோம். பெண்கள் பங்கேற்பிலும் சாதனை படைத்திருக்கிறோம். மிக விரைவில் 100 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் என்ற சாதனையை பெறுவோம். ஜனநாயகத்தில் கேள்வி எழுப்புவது சரிதான். ஓட்டு மிஷின்கள், வாக்காளர் பட்டியல்கள் குறித்த சந்தேகங்களும் அப்படித்தான் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தல் துறையுடன் தொடர்பில் இருக்கின்றனர். முழு தகவல் வெளியான பின் ஆட்சேபனைகளை தெரிவிக்க கட்சிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.