உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெக மாநாடு காரணமாக போக்குவரத்து மாற்றம்! Actor Vijay | TVK Conference | Villupuram

தவெக மாநாடு காரணமாக போக்குவரத்து மாற்றம்! Actor Vijay | TVK Conference | Villupuram

விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை நடக்கிறது. தலைமை செயலகத்துடன் கூடிய பிரமாண்ட நுழைவு வாயில்; 100 அடி கொடிக்கம்பம், எல்இடி திரைகள், ரேம்ப் வாக் மேடையுடன் கூடிய பிரமாண்ட மேடை; குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்த இடமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள், தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வரத்துவங்கி விட்டனர். இதனிடையே, மாநாட்டு திடலுக்கு நடிகர் விஜய் திடீரென சென்றார். கேரவனில் வந்த விஜய் மாநாட்டுக்கு செய்யப்பட்டு உள்ள அனைத்து ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். தவெக மாநாட்டுக்கு அதிகளவில் தொண்டர்கள் வருவார்கள் என்பதால் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி வழியாக சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என சுங்கசாவடி அறிவித்துள்ளது. இந்த சூழலில் பாதுகாப்பு கருதி இன்று பிற்பகல் 2 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, மாநாட்டிற்கு வரும் பதிவு செய்துள்ள வாகனங்களை தவிர, சென்னையில் இருந்து திருச்சி மார்க்கம் செல்லும் பிற வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக விழுப்புரம் நோக்கி செல்ல வேண்டும்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை