/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 1980, 2001 தேர்தல்களில் நடந்தது 2026லும் நடக்கும் | Nainar nagendran | elections 2026 congress dmk
1980, 2001 தேர்தல்களில் நடந்தது 2026லும் நடக்கும் | Nainar nagendran | elections 2026 congress dmk
திமுக கூட்டணியில் பல ஆண்டாக காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. ஆனாலும் கூட்டணி தர்மத்தை மீறி காங்கிரசில் இருந்தே தொண்டர்களை இழுக்கும் வேலையை திமுக செய்கிறது. கரூர் மாவட்டத்தில் இதுபோல, காங்கிரசில் இருந்து மகளிரணி நிர்வாகி கவிதாவை இழுத்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக, செல்வப்பெருந்தகையும், ஜோதிமணியும் பொங்கி எழுந்தனர். இந்த விவகாரம் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு போன பிறகே, கவிதா திமுகவில் இணைந்தது பற்றி போட்ட பதிவை செந்தில்பாலாஜி நீக்கினார். இதுபற்றி நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, திமுகவை நம்பியிருந்தால் காங்கிரசை திமுக விழுங்கிவிடும் என பதிலளித்தார்.
செப் 26, 2025