நக்ஸல்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை! Amit Shah | Minister | BJP | Naxalite
சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேரை, டில்லியில் உள்ள தன் இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் நக்சல்களால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கு துவங்கப்பட்ட பஸ்தார் அமைதிக் குழு சார்பில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. நக்சல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலநிலை குறித்த ஆவணப்படம் அப்போது திரையிடப்பட்டது. சந்திப்பில் பங்கேற்ற சிலர், தாங்கள் அடைந்த துயரங்களை மத்திய அமைச்சரிடம் பகிர்ந்தனர்.
செப் 21, 2024