/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சமூக நீதியை பேசி ஏமாற்றும் திமுக அரசு: அண்ணாமலை | Annamalai | SC ST Hostels | Bad Situations
சமூக நீதியை பேசி ஏமாற்றும் திமுக அரசு: அண்ணாமலை | Annamalai | SC ST Hostels | Bad Situations
தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் உணவு தரமற்ற முறையில் இருப்பதால் மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்றும் இந்த உணவு கால்நடை பண்ணைகளுக்கு விற்கப்படுவதாகவும் தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் இதே நிலைதான் நிலவுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் 2024-25ம் ஆண்டுக்கான கொள்கை குறிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 1,331 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படிக்கின்றனர். மானிய கோரிக்கைப்படி இந்த மாணவர்களுக்கு உணவு செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மார் 31, 2025