உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாடு நாசமா போயிட்டிருக்கு; அப்பா, தாத்தா விளம்பரம் கேட்குதா? | Annamalai Bjp | Gang attacked | crim

நாடு நாசமா போயிட்டிருக்கு; அப்பா, தாத்தா விளம்பரம் கேட்குதா? | Annamalai Bjp | Gang attacked | crim

கணவனை காக்க போராடும் பெண் தமிழகம் இதுவரை காணாத அவலம் வெட்கமா இல்லையா ஸ்டாலின் அவர்களே? ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஜான் என்ற ரவுடியை மனைவி கண் முன்னே 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த பயங்கரத்தை இன்னொரு காரில் இருந்து சிலர் வீடியோ எடுத்துள்ளனர். கணவனை காப்பாற்ற மனைவி போராடும் அந்த வீடியோவை டேக் செய்து பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. இது போன்ற அவல நிலையை தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே... என அறிக்கையில் அண்ணாமலை காட்டமாக கேட்டுள்ளார்.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி