₹524 கோடி ஒப்பந்தத்தில் ஊழல்; தோலுரித்த அண்ணாமலை | annamalai| selvaperunthagai| mk stalin
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: தூய்மை பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதாக அறிவித்து, அவர்கள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், மூலமாக, அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ள, 524 கோடி ரூபாய் மதிப்பில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்திருந்தது. நவீன கழிவுநீர் அகற்றும் வாகனம் வாங்க, சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் 33 பயனாளிகளுக்கும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் 54 பேருக்கு 65 லட்சம் வீதம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் வங்கியில் கடன் வழங்கி 7 மாதங்கள் ஆகியும் கடன் தொகையில் ஒரு ரூபாய் கூட திருப்பி செலுத்தப்படவில்லை. எந்தவித பிணையும் இல்லாமல், இத்தனை பேருக்குத் தலா 65 லட்சம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது. உண்மையில் கடன் பெற்றவர்கள் தூய்மை பணியாளர்கள்தானா? என்ற சந்தேகம் இருக்கிறது.