/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 1.20 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சல்கள் 63 பேர் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரண்
1.20 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சல்கள் 63 பேர் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரண்
சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் அரசின் நலத்திட்டங்களை எதிர்க்கும் நக்சல்கள், சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதால், அவர்களை முற்றிலும் ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், நக்சல்கள் திருந்தி ஆயுதங்களை கைவிட்டு, தாமாகவே முன்வந்து சரண் அடைய மத்திய உள்துறை அமைச்சகம் வாய்ப்பு வழங்கியுள்ளது. சரண் அடைவோருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கி, அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி, வேலை வாய்ப்புக்கு அரசு உதவும் என உத்தரவாதம் அளித்துள்ளது. அதே போல், அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
ஜன 09, 2026