பாஜ அஸ்வத்தாமனிடம் ரயில்வே அமைச்சர் கொடுத்த உறுதி | Ashvathaman | Railway Minister Ashwini Vaishnaw
சென்னையில் இருந்து பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டில்லியில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில், ராமேஸ்வரம் பாம்பன் பாலம் பழமையானதால், 535 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு புதிய பாலத்தை கட்டியுள்ளது. அதை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பழைய பாலத்தில், தண்டவாளத்தில் செல்லும் சிறிய வகை வண்டிகளில் சென்று, கடலின் அழகையும், கப்பல்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னை - திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் பாதை இல்லை. காட்பாடி, வேலுார் வழியாக திருவண்ணாமலைக்கு ரயிலில் செல்ல 6 மணி நேரம் ஆகிறது. திண்டிவனம் வழியாக சென்னை ---- திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் பாதை அமைத்தால், பயண நேரம் 3 மணி நேரமாக குறையும்.