/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது கோர்ட் அறைக்குள் தாக்குதல் முயற்சி | Attack on Gavai
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது கோர்ட் அறைக்குள் தாக்குதல் முயற்சி | Attack on Gavai
சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கமான முறையில் வழக்கு விசாரணை நடந்தது. கோர்ட் அறை எண் 1ல் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோர்ட் அறைக்குள் வந்த ஒருவர், தன் கால்களில் அணிந்திருந்த ஷுவை கழற்றினார். அவரது செயலை பார்த்ததும் சுதாரித்த அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சூழ்ந்து கொண்டனர். உடனே, அவர் ஷுவை எடுத்து கவாயை நோக்கி வீசினார். ஆனால், அது நீதிபதி மீது படாமல் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டது. இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அக் 06, 2025