சின்வார் கடைசி தருணம்: இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ | Israel Defense | Yahya Sinwar hamas chief
இஸ்ரேல் மக்களுக்கு நிம்மதி நாளையே போர் முடியும்! ஆனா? காசா மக்களுக்கு நெதன்யாகு மெசேஜ் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை தாண்டியும் நடந்து வருகிறது. இந்த போரில் காசாவில் 42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இஸ்ரேல் வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது ஈரான் கட்டமைத்த பயங்கரவாதத்தின் அச்சு சரிந்து வருகிறது. ஹெஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று சின்வார் கொல்லப்பட்டுள்ளார்.