பீகார் மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் | Bihar Elections| RJD manifesto| tejashwi
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி! பெண்களுக்கு ₹2,500 வீட்டுக்கு மின்சாரம் ப்ரீ பீகார் சட்டசபைக்கு வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிரதான எதிர்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ஆர்ஜேடி கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் அறிக்கையை வெளியிட்டார். அவர் பேசும்போது, பீகாரை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு ஆவணம் தான் இந்த தேர்தல் அறிக்கை. வளர்ச்சியில் மாநிலத்தை நம்பர் ஒன் ஆக்குவோம். அதற்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது. 5 ஆண்டுகளில் நாங்கள் எப்படி செயல்படுவோம் என்பதை இந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறோம். என்டிஏ கூட்டணி ஆட்சி, பீகாருக்கு எதுவும் செய்யவில்லை. அதிகார மாற்றத்தை காண மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த முறை பீகார் மக்கள் அந்த வாய்ப்பை தவறவிட மாட்டார்கள் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார். இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை பார்க்கலாம்.