தலைநகரை இந்த முறை விடக்கூடாது: பாஜ தீவிரம் delhi election| Bjp| Bjp cm candidate
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் வேட்பாளராக இறக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. தொடர்ந்து 6 தேர்தல்களில் தோல்வியடைந்த பாஜ இந்த முறை ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. டெல்லியை சாராத ஒருவரை வேட்பாளராக நிறுத்தியதே தோல்விக்கு காரணமாக பாஜ பார்க்கிறது. இச்சூழலில், யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்பதில் பாஜவுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. முதல்வர் வேட்பாளர் போட்டியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸஅமிருதி இரானி முன்னிலையில் இருக்கிறார். 2019 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுலை வென்றவர். இந்தாண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கட்சியின் ஆதரவை பெற்றுள்ளார். டெல்லி முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி எம்பியும் முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறார். இவர்களை தவிர லோக்சபா எம்பி கமல்ஜீத் ஷெராவத் உள்ளிட்டேரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.