உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின் துபாய் பயணத்தில் நடந்தது என்ன? | RTI | Stalin Dubai

ஸ்டாலின் துபாய் பயணத்தில் நடந்தது என்ன? | RTI | Stalin Dubai

ஸ்டாலின் பயண செலவு ₹7 கோடி துபாய் விசிட் மொத்தமும் மர்மம்? அம்பலப்படுத்தும் RTI தகவல் முதல்வராக பொறுப்பேற்றது முதல் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட காரணங்களுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். அந்த வகையில் துபாய் சிங்கப்பூர் ஜப்பான் ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். முதல்வரின் வெளிநாட்டு பயணச் செலவுகள் குறித்த விபரங்களை சமூக ஆர்வலர் காசிமயன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். அதன்படி 2023ல் சிங்கப்பூர் பயணத்திற்கு 26.84 லட்சமும், ஜப்பான் பயணத்திற்கு 88.06 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. 2024ல் ஸ்பெயினுக்கு செல்ல 3.98 கோடியும் அமெரிக்கா செல்ல 1.99 கோடியும் செலவிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதில் 2022ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்ற போது அரசு செலவிடப்பட்ட தொகை குறித்த விபரங்கள் கொடுக்கப்படவில்லை.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை