அடுத்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரலாறு | C. P. Radhakrishnan | Vice President | NDA
துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த மாதம் 22ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். புதிய துணை ஜனாதிபதியை தேர்வும் செய்யும் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் ஓட்டு போட தகுதி பெற்றவர்கள் ஆவர். தேர்தலில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய பாஜ பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை நிறுத்த கூட்டத்தில் முடிவானது. இதை பாஜ தலைவர் நட்டா அறிவித்தார்.