உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டில்லி சட்டசபையில் அமளி: அதிஷி,14 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் | Delhi assmbly | CM Rekha Gupta | Atishi

டில்லி சட்டசபையில் அமளி: அதிஷி,14 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் | Delhi assmbly | CM Rekha Gupta | Atishi

பிரதமர் மோடி சொன்னதுபோல 11 சிஏஜி அறிக்கைகள் தாக்கல் அதிஷி உட்பட 15 MLA சஸ்பெண்ட் டில்லி சட்டசபை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும் வெற்றி உரை ஆற்றிய பிரதமர் மோடி , ஆம் ஆத்மி அரசு செய்த முறைகேடுகள் தொடர்பான ஆய்வறிக்கைகள் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்றார். நேற்று டில்லி சட்டசபையில் முதல் கூட்டத் தொடர் துவங்கியது. முதல்வர் ரேகா குப்தா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டனர். பாஜ எம்எல்ஏ விஜேந்தர் குப்தா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று சட்டசபையின் 2வது நாள் கூட்டம் நடந்தது. கவர்னர் வி.கே.சக்சேனா உரையாற்றினார். மத்திய மாநில அரசுகள் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் மக்களுக்கு நன்மை விளையும். கடந்த 10 ஆண்டாக மத்திய அரசுடனும், மற்ற மாநில அரசுகளுடனும் முந்தைய அரசு மோதல் போக்கை கடைப்பிடித்தது. இதனால் டில்லி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். முந்தைய அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்த சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்மூலம் திட்டங்களின் செயலாக்கத்தில் நடந்த தவறுகள் கண்டறியப்படும். வரும் காலங்களில் திறம்பட திட்டங்களை செயல்படுத்த முடியும் என அரசு நம்புகிறது. என கவர்னர் சக்சேனா கூறினார். ப்ரத் வி.கே.சக்சேனா கவர்னர் கவர்னர் பேசத் துவங்கியதும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமளி துமளியில் ஈடுபடத் துவங்கினர். சிஏஜி அறிக்கைகள் மீது விவாதம் நடத்த ஆம் ஆத்மி தயாராக இருக்கிறது. ஆனால், பாஜவின் நோக்கம் வேறு மாதிாி இருக்கிறது. முதல்வரின் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் படம் அகற்றப்பட்டு பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜவின் முகத்திரை கிழிந்துவிட்டது; மீண்டும் அம்பேத்கர் படத்தை வைக்கும்வரை ஓயமாட்டோம் என ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடர்ந்து கோஷங்களை முழங்கிக் கொண்டிருந்தனர். அவரவர் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் விஜேந்தர் குப்தா, பல முறை எச்சரித்தும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கேட்கவில்லை. அதைத் தொடர்ந்து, எதிர்கட்சித் தலைவர் அதிஷி, கோபால் ராய் உட்பட 22 ஆம்ஆத்மி எம்எல்ஏக்களையும் வெளியேறற சபை காவலர்களுக்கு சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார். கவர்னர் உரையை முடித்த பிறகு, டில்லி அரசின் செயல்பாடுகள் தொடர்பான 14 சிஏஜி அறிக்கைகளை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார். முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தபோது, Flag staff road ப்ளேக் ஸ்டாப் சாலையில் உள்ள முதல்வரின் பங்களா புதுப்பிக்கப்பட்டது தொடர்பாகவும் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதல்வரின் பங்களாவை புதுப்பிப்பதில் திட்டமிடுதல், டெண்டர் விடுதல், செயல்படுத்துதல் என அனைத்து நிலையிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. 2020ல் ஏழரை கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகளை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், 34 கோடி ரூபாய் செலவில் 2022ல்தான் பணிகள் முடிந்தன. இது, 342 சதவீதம் அதிகம் என சிஏஜி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மதுபான கொள்கை தொடர்பாகவும் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான ஊழல் வழக்கில்தான் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதவிர, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், குடிநீர் திட்டங்கள் தொடர்பான சிஏஜி அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சிஏஜி அறிக்கைகள் மூலம் முந்தைய ஆம் ஆத்மிஅரசின் ஊழல்கள் அம்பலத்துக்கு வரும் என பாஜ எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய் கூறினார். கெஜ்ரிவால் முதல் அதிஷி வரை எல்லாரும் ஊழல் வழக்கில் சிக்கப் போகிறார்கள். தாங்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிக்கப் போகிறார்கள் எனவும் சதீஷ் உபாத்யாய் கூறினார். சிஏஜி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும், அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதை கண்டித்து, மீண்டும் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளி துமளியில் ஈடுபட்டனர். அதனால் எதிர்கட்சித்தலைவர் அதிஷி, கோபால் ராய் உட்பட ஆம்ஆத்மியின் 15 எம்எல்ஏக்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் விஜேந்தர் குப்தா அறிவித்தார். சட்டசபைக்கு வெளியே பேட்டியளித்த அதிஷி, முதல்வர் அலுவலகத்தில் மீண்டும் அம்பேத்கர் படத்தை வைக்கும் வரை நாங்கள் சட்டசபையில் போராடுவோம் என கூறினார்.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை