உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டிஜிபி அலுவலகத்தில் பாஜ சார்பில் மனு | DMK | Minister KN Nehru | Job Scam | DMK Job Scam | ED

டிஜிபி அலுவலகத்தில் பாஜ சார்பில் மனு | DMK | Minister KN Nehru | Job Scam | DMK Job Scam | ED

அமைச்சர் நேரு துறையில் ஊழல் FIR போட முருகானந்தம் மனு அமைச்சர் நேரு துறையில் பணி நியமனத்தில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக உத்தரவிட வேண்டும் என தமிழக பாஜ பொதுச் செயலர் முருகானந்தம் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நேரு அமைச்சராக உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ததில் ஊழல் நடந்து உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அக்.,27ல் 232 பக்க ஆதாரங்களுடன் தங்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர். வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரி உள்ளனர். அமைச்சர் நேரு துறையில் நடந்த பணி நியமன ஊழலால் இளைஞர்களின் அரசு வேலை கனவு தகர்ந்து எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என முருகானந்தம் கூறி உள்ளார்.

நவ 06, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராமகிருஷ்ணன்
நவ 06, 2025 07:15

எல்லா பிரச்சினைகளையும் திமுக வழக்கு போட்டு பம்மாத்து செய்யும்.


NellaiBaskar
நவ 06, 2025 07:02

திமுகவில் கடைநிலை ஊழியரைக்கூட தண்டிக்க முடியாது இதில் அமைச்சர் மீது போங்க சார் காமெடி பண்ணிட்டு.....


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை