உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டாக்டருக்கு கத்திகுத்து; தலைவர்கள் கண்டன குரல் | Guindy Hospital | Doctor Attack | Guindy Doctor

டாக்டருக்கு கத்திகுத்து; தலைவர்கள் கண்டன குரல் | Guindy Hospital | Doctor Attack | Guindy Doctor

இப்பவும் அதே டயலாக்கா? முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் சென்னை கிண்டி அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்தி குத்து சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது. கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், விரிவான விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் அறிக்கை; ஏற்கனவே கடந்த 5ம் தேதி திருச்சியில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன. அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை. தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தை கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது சட்டம் ஒழுங்கை காப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்டாலின் எடுக்க வேண்டும் என பழனிசாமி கூறி உள்ளார்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி