நீதிபதி பதவி நீக்க அச்சுறுத்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது! 56 ex-judges | Impeachment | Judge Swaminat
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை சமீபத்தில் தீர்ப்பளித்தது. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இந்த தீர்ப்பை வழங்கினார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சி எம்பிக்கள் 100க்கும் மேற்பட்டோர் பார்லிமென்டில் வலியுறுத்தினர். நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்க கோரும் தீர்மானத்துக்கான நோட்டீசை லோக்சபா தலைவர் ஓம் பிர்லாவிடம் அவர்கள் அளித்தனர். எம்பிக்களின் இந்த செயலுக்கு முன்னாள் தலைமை நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர்களாக உள்ள முன்னாள் நீதிபதிகள் என 56 பேர் ஒன்றாக கையெழுத்திட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், ஹேமந்த் குப்தா, மெட்ராஸ் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் சுப்ரமணியன், சிவஞானம், பாட்னா ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி, அலாகபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அரோரா, ராஜஸ்தான் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி அனில் தியோ கோயல் முதலானவர்கள் இதில் கையெழுத்து போட்டுள்ளனர். #56ExJudges #Impeachment #JudgeSwaminathan #LegalSystem #Justice #Judiciary #JudicialReform #CourtDecisions #RuleOfLaw #LawAndOrder #JudicialEthics #ExJudges #PoliticalAccountability #PublicTrust #FairTrial #LawyerLife #JusticeForAll #LegalNews #CourtroomDrama