உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ வெற்றிக்கு இது தான் காரணம்: கபில் சிபல் பரபரப்பு | INDIA Alliance | Kapil Sibal | Congress | BJP

பாஜ வெற்றிக்கு இது தான் காரணம்: கபில் சிபல் பரபரப்பு | INDIA Alliance | Kapil Sibal | Congress | BJP

TNல் இண்டி கூட்டணி வலிமை மற்ற மாநிலங்களில் இல்லையே..! சிந்திக்க வேண்டிய தருணம் இது டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்வியை அடுத்து, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் இண்டி கூட்டணியின் ஒருங்கிணைப்பில் குறை உள்ளதாக கருத்து கூறி வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் கூறியதாவது: தேசிய அளவில் பாஜவை வீழ்த்துவதற்காகவே எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டி கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், மாநில அளவிலான தேர்தல்களின் போது, நம் ஒற்றுமையை மறந்து, பிரிந்து செயல்படுவதால், பாஜவை வீழ்த்தும் நோக்கம் நிறைவேறாமல் போகிறது. முதலில் இண்டி கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் கருத்தொற்றுமைக்கு வரவேண்டும். ஒன்றாக செயல்பட வேண்டும். அமர்ந்து பேசி தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை போக்க முயற்சிக்க வேண்டும். இந்த கூட்டணி தேசிய அளவிலான பரந்த மனப்பான்மையுடன் சிந்திக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அப்போதே கூறினார். ஆனால், அதை செய்யாததால் தான் இண்டி கூட்டணி தோல்வியை தழுவி வருகிறது. பீகார் தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சியால் தான் தங்களால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது என, ராஷ்ட்ரிய ஜனதாதளம் பகிரங்கமாக குற்றம்சாட்டியது. அது அப்படி அல்ல. உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தில் சரியான கூட்டணி அமைத்ததால் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு சீட்கள் கிடைத்தன. பாஜ ஒற்றை தலைமையின் கீழ் இயங்குகிறது. அதனால் அவர்களால் சரியான முடிவெடுத்து ஒற்றுமையாக செயல்பட முடிகிறது. இதுவே பாஜவின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இண்டி கூட்டணி கட்சிகளும் பேதங்களை மறந்து அமர்ந்து பேசி நல்ல முடிவெடுக்க முடியும். அப்படி செய்தால், எதிர் வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என கபில் சிபல் கூறினார்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி