/ தினமலர் டிவி
/ அரசியல்
/ லட்சத்தீவில் இந்தியா செய்யும் சம்பவம்... சீனாவுக்கு அதிர்ச்சி | India vs China | lakshadweep | Army
லட்சத்தீவில் இந்தியா செய்யும் சம்பவம்... சீனாவுக்கு அதிர்ச்சி | India vs China | lakshadweep | Army
தென் சீன கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. சீனாவின் அடாவடிக்கு கிடுக்கிப்பிடி போட இந்திய புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் மினிகாய் தீவில் புதிய விமான தளமும், அகாட்டி தீவில் இப்போது இருக்கும் விமான தளத்தை விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விமான தளங்கள், ராணுவ தேவை மற்றும் பொது போக்குவரத்து ஆகிய இரண்டுக்கும் உதவியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளன.
ஜூலை 20, 2024