இந்தியா முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை | Indus Waters Treaty | India Pak Tensions | Pahalgam
ராபி கால பயிர்கள் காய்கிறது
இந்தியாவிடம் கெஞ்சும் பாக்!
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டு உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது.
1960ல் உலக வங்கி முன்னிலையில் இரு நாடுகள் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி, மேற்கே ஓடும் சிந்து, ஜீலம், செனாப் ஆறுகளில் இருந்து 80 சதவீத தண்ணீரை பாகிஸ்தானுக்கு இந்தியா தந்து வந்தது.
பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவீதம், இந்த நதிகளின் நீர் பாசன விவசாயம் மூலம் கிடைக்கிறது.
இதனால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியம்.
தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது என பிரதமர் மோடி கூறிவிட்டார். இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. அதைப்பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.
விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பி இருக்கிறது.
சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தத்தால், பாகிஸ்தானில் ரபி பருவ பயிர்கள், பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஒப்பந்த நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்யும்படி பாகிஸ்தான் கெஞ்சி வருகிறது.