ஈரான் வீசிய ரகசிய ஆயுதத்தில் 3 கொடிய சக்தி | israel vs iran | cluster bomb | idf | sejjil missile
ஒரு மிசைலில் கொத்து கொத்தா குண்டு இஸ்ரேலை நடுங்கவிட்ட ஈரான் ஆயுதம்! உலகை பதற வைத்த ஆயுதத்தில் 3 அதிர்ச்சி இஸ்ரேல், ஈரான் இடையே தீவிர போர் நடக்கிறது. இந்த போரில் கிளஸ்டர் ரக குண்டுகளை ஈரான் பயன்படுத்தி இருப்பது உலகையே பரபரக்க வைத்து விட்டது. இதுவரை நடந்த இஸ்ரேலை காட்டிலும் எல்லா வகையிலும் ஈரானுக்கு இழப்பு அதிகம். அந்த பகுதிக்கு சென்றதும் சில கிலோ மீட்டர் உயரத்தில் ஏவுகணை வெடித்து, உள்ளே இருக்கும் குண்டுகள் கொத்து கொத்தாக சிதறி விழும். அவை பல கிலோ மீட்டர் ரேடியசில் விழுந்து வெடிக்கும். ஒவ்வொன்றும் எந்த இடத்தில் விழ வேண்டும் என்பதை வீசும் நாட்டால் தீர்மானிக்க முடியாது. அவை கண்ட இடங்களில் விழுந்து வெடிக்கும். எனவே தான் இதில் பாதிப்பு அதிகம்.