புதுக்கோட்டை கலெக்டரின் அதிரடி உத்தரவு | Jagabar ali case | 5 Arrested remanded | Quarry seal
புதுக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக போராடியதால் ஜனவரி 17ல் லாரி ஏற்றி கொல்லப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் ஆர் ஆர் குவாரி உரிமையாளர்கள் ராமையா, ராசு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் 3 நாள் சிபிசிஐடி காவல் முடிந்த நிலையில் இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவர்களில் ராசு, ராமையா நடத்தும் ஆர்ஆர் குவாரியின் உரிமம் 2023லேயே முடிந்த நிலையில், சட்ட விரோதமாக குவாரி இயங்கி வந்துள்ளது. குவாரிக்கு அருகே உள்ள இவர்களின் ஆர்ஆர் கிரஷர் மட்டும் உரிமத்தோடு செயல்பட்டு வந்த நிலையில், அந்த லைசென்சையும் கலெக்டர் அருணா இன்று ரத்து செய்தார். தொடர்ந்து கலெக்டரின் உத்தரவுப்படி ஆர் ஆர் குவாரி மற்றும் கிரஷருக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா சீல் வைத்தார். சீல் உத்தரவை மீறி குவாரி மற்றும் கிரஷருக்கு உள்ளே செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸும் ஒட்டப்பட்டது.