இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்! Joe Biden quit White House race | Kamala Harris
அதிபர் தேர்தலிலிருந்து விலகியது ஏன்? ஜோ பைடன் விளக்கம்! அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட விரும்பிய ஜனநாயக கட்சி வேட்பாளர் அதிபர் ஜோ பைடன், சில நாட்களுக்கு முன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை, ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக்க அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரீஸ், தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டுவதில் வரலாறு படைத்துள்ளார். இந்நிலையில் போட்டியிலிருந்து விலகியது ஏன் என அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார்.