உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கவின் வீட்டில் அமைச்சர்கள்: ஆறுதல் சொல்ல குவிந்த தலைவர்கள் |

கவின் வீட்டில் அமைச்சர்கள்: ஆறுதல் சொல்ல குவிந்த தலைவர்கள் |

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கவின், திருநெல்வேலி டவுனை சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் டாக்டரை 8 ஆண்டாக காதலித்தார். கவின் பட்டியலினத்தை சேர்ந்தவர். டாக்டர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர். டாக்டரின் அம்மா, அப்பா இருவருமே சப் இன்ஸ்பெக்டர்களாக உள்ளனர். மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீ வேற சாதி; நாங்க வேற சாதி என டாக்டரின் தம்பி சுர்ஜித் கவினை பலமுறை எச்சரித்தான். அதை கவின் பொருட்படுத்தாத நிலையில், கடந்த 27 ம்தேதியன்று திருநெல்வேலி டவுனுக்கு வந்த கவினை சுர்ஜித் சமரசம் பேச வீட்டுக்கு அழைத்துச் செல்வது போல நடித்து கொடூரமாக வெட்டிக் கொன்றான். இந்த ஆணவக்கொலை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகநே்திரன் இன்று காலை 8 மணிக்கு ஆறுமுக மங்கலத்தில் உள்ள கவின் வீட்டுக்கு சென்று, தாய் தமிழ்ச்செல்வி, தந்தை சந்திரசேகருக்கு ஆறுதல் கூறினார். கொலை நடப்பதற்கு 10 நாளுக்கு முன் திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் கவினை மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு இதை உயரதிகாரிகள் விசாரித்து தடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார். நயினார் நாகேந்திரன் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் திமுக எம்பி கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்து கவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர். கவின் கொலையில் பெண் டாக்டரின் அப்பா சப் இன்ஸ்பெக்டர் சரவணனை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். அதை சுட்டிக் காட்டிய கவின் தந்தை சந்திரசேகர், டாக்டரின் தாய் கிருஷ்ணகுமாரியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேட்டு கனிமொழியுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை