அரசுப்பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெளிவந்த உண்மைகள்! | Manamadurai | Sivaganga | Govt School
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் 2 நாட்களுக்கு முன் குழந்தைகள் நல குழுமத்தினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அப்போது நடந்த கலந்துரையாடலில் மாணவிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்தனர். யாரேனும் தவறாக நடந்தார்களா? என்ற கேள்விக்கு 4 பேரிடம் கிடைத்த பதிலால் அதிர்சியடைந்த பெண் அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்தனர். 8 சிறுமிகளுக்கு பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மானாமதுரை மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதே ஊரை சேர்ந்த முனியன், மூக்கன், பழனி, மணி , சசி வர்ணம், லட்சுமணன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். போக்சோவில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ராமு, ஊர் மக்கள் தாக்கியதில் காயமடைந்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். வேறு ஏதும் மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. நேற்று கிருஷ்ணகிரி இன்று மானாமதுரை என தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லையில் சிக்கும் விவகாரம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.