வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முதலில் ஆயில் வாங்குறதை நிறுத்தணும்.
மனிபூரே சந்தி சிரிக்குது இதுல இவர் போர நிறுத்துறாரா..
மோடி தான் போரை நிறுத்துவார்! உலகமே நம்பிக்கை modi macron talk | ukraine russia war | modi vs trump
போரை நிறுத்தும் பவர் மோடி கையில் இந்தியா பக்கம் திரும்பும் தலைவர்கள் மவுசை இழந்தார் டிரம்ப்? முடிவை மாற்றிய உலகம் அதிபராக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்தி விடுவேன் என்று டிரம்ப் சொல்லி இருந்தார். கிட்டத்தட்ட 8 மாதங்கள் நிறைவு பெற்று விட்டன. ஆனால் இப்போது வரை அவரால் போரை நிறுத்த முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். இதன் உச்ச நடவடிக்கையாக சமீபத்தில் ரஷ்ய அதிபர் புடினை அமெரிக்காவுக்கு வர வைத்து பேசினார். அதன் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோடும் வெள்ளை மாளிகையில் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பினும் போர் நிறுத்தம் வரவில்லை. அதன் பிறகு பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. ரஷ்யாவிடம் இந்தியா தான் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. அந்த நாட்டுக்கு வரி போட்டு ரஷ்யாவை வழிக்கு வைக்கிறேன் என்று அடாவடியாக நமக்கு வரி போட்டார். ஆனால் நாம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை. இதுவே டிரம்புக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்போது உலக தலைவர்கள் அவருக்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுக்க துவங்கி இருக்கின்றனர். போரில் ஈடுபட்டுள்ள இரு நாட்டின் தலைவர்களான புடின், ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக மோடியிடம் பேச ஆரம்பித்து விட்டனர். ஐரோப்பிய தலைவர்கள் தொடர்ந்து மோடியிடம் பேசி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான், நம் பிரதமர் மோடியுடன் பேசினார். உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக 2 தலைவர்களும் விவாதித்தனர். மேக்ரானுடன் பேசியது பற்றி பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: அதிபர் மேக்ரானுடனான உரையாடல் சிறப்பாக இருந்தது. பிரான்ஸ், இந்தியா இடையே பல துறை சார்ந்த ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பது பற்றி விவாதித்தோம். உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்தும் பேசினோம். உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் இந்தியா, பிரான்ஸ் கூட்டணி தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று மோடி சொல்லி இருந்தார். இதே போல் பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் அறிக்கை வெளியிட்டு உள்ளார். கடந்த வியாழக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் பிரான்சில் முக்கிய ஆலோசனை நடத்தினோம். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் எடுத்த முடிவுகள் பற்றி பிரதமர் மோடியிடம் விவரித்தேன். உக்ரைனில் நியாயமான மற்றும் நீடித்த அமைதியை கொண்டு வருவதில் இந்தியாவும், பிரான்சும் உறுதியாக இருக்கின்றன. அமைதியை கொண்டு வர தொடர்ந்து செயல்படுவோம் என்று மேக்ரான் கூறி உள்ளார். போர் நிறுத்தத்தின் மையப்புள்ளியாக டிரம்ப் இருந்த நிலையில், இப்போது அந்த இடத்தில் பிரதமர் மோடியும் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டார். ரஷ்ய அதிபர் புடினுடன் அவருக்கு இருக்கும் நட்பு காரணமாக ஐரோப்பிய தலைவர்கள் பலரும் மோடியுடன் பேசி வருகின்றனர். கடைசி 2 மாதத்தில் மட்டும் ரஷ்ய அதிபர் புடின் 2 முறை, ஜெலன்ஸ்கி 2 முறை மோடியுடன் போர் தொடர்பாக பேசி இருக்கின்றனர். இப்போது 2வது முறையாக பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் பேசி உள்ளார். இவர் தவிர ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மோடியிடம் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஆயில் வாங்குறதை நிறுத்தணும்.
மனிபூரே சந்தி சிரிக்குது இதுல இவர் போர நிறுத்துறாரா..