உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்., பொதுச்செயலர் வேணுகோபால் அறிவிப்பு | MP Rahul Rally | Bihar | CM Stalin

காங்., பொதுச்செயலர் வேணுகோபால் அறிவிப்பு | MP Rahul Rally | Bihar | CM Stalin

ராகுல் நடைபயணத்தில் கை கோர்க்கிறார் ஸ்டாலின் வாக்காளர் பட்டியலில் பாஜ முறைகேடு செய்துள்ளதாக கூறி வரும் ராகுல் சென்ற 17ம் தேதி முதல், பீகாரில் நடைபயணம் துவக்கி உள்ளார். 15 நாட்கள் தங்கி அங்கு அவர் செல்லும் நடைபயணத்தில், இண்டி கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று ராகுலுடன் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ராகுல், தன்னுடைய நடைபயணத்தில் கூட்டணி ஆளும் மாநில முதல்வர்களும், தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். அழைப்பு ஏற்று வரும் 27ல், ராகுலின் நடைபயணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அவரைப் போலவே பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பர் என கூறி உள்ளார். ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக, திமுக தரப்பிலும் கூறுகின்றனர். 2022ல் கன்னியாகுமரியில் ராகுல் துவங்கிய பாரத் ஜோடோ யாத்திரையை முதல்வர் ஸ்டாலின் தான் துவக்கி வைத்தார்.

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி