ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் சொன்ன விஷயம்| Netanyahu | Iranians | Ayatollah Khamenei
ஜெயிக்க முடியாத போருக்காக வீண் செலவு செய்கிறது ஈரான்! தாக்குதல் தொடர்ந்தால் பொருளாதாரம் அம்போ பாலஸ்தீனத்தின் காஸாவை ஆளும் ஹமாஸ் லெபனானில் ஹெஸ்புலா பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரே நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் ஹெஸ்புலாவுக்கு பின்னால் இருந்து இயக்கும் ஈரானும், இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. இச்சூழலில் ஈரான் நாட்டு மக்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றி வீடியோ வெளியிட்டு உள்ளார். கடந்த அக்டோபரில் இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்கியது. அதற்கான செலவு எவ்வளவு தெரியுமா? 2.3 பில்லியன் டாலர்கள். அந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஓரளவு சேதம் ஏற்பட்டதுதான். ஆனால் அவர்கள் உங்களுக்கு எந்த மாதிரியான சேதத்தை ஏற்படுத்தினார்கள் தெரியுமா? ஏவுகணைகளுக்கு செலவளித்த பணத்தை உங்கள் போக்குவரத்து அல்லது கல்வி பட்ஜெட்டுக்கு பயன்படுத்தி இருக்கலாம். அதற்கு பதிலாக கமெனி தமது ஆட்சியின் மிருகத்தனத்தை காட்டினார். உலகத்தை உங்கள் நாட்டிற்கு எதிராக திருப்பினார். அவர் உங்களது பணத்தை கொள்ளையடித்து விட்டார். இஸ்ரேல் உடன் போருக்கு செலவழித்ததை விட கல்வி உள்கட்டமைப்பு சுகாதாரம் ஆகியவற்றுக்கு செலவழித்தால் ஈரானியர்களின் வாழ்க்கை மாறும். ஈரான் சுதந்திரமாக இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கண்களை மூடி உங்கள் குழந்தைகள் முகத்தை கற்பனை செய்து பாருங்கள். அவர்களின் திறன்கள் வாழ்க்கை பற்றி சிந்தியுங்கள்.