உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமர் கார்ட்டூன் விவகாரம்! வெங்கடேசனுக்கு நிர்மலா பதிலடி | Nirmala Sitharaman | MP Venkatesan

பிரதமர் கார்ட்டூன் விவகாரம்! வெங்கடேசனுக்கு நிர்மலா பதிலடி | Nirmala Sitharaman | MP Venkatesan

சும்மா வேடிக்கை பார்க்க முடியாது! சீறிய நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் நேற்றைய விவாதத்தின் போது பேசிய மதுரை எம்பி சு வெங்கடேசன், இந்தியர்களை விலங்கிட்டு அனுப்பி வைத்தது அமெரிக்கா. அதன் மீது கோபம் வரவில்லை. அதற்கு எதிராக கார்ட்டூன் போட்ட பத்திரிகை மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்கள். இது நாகரிகமா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எனக்கு முன்பாக பேசிய காங்கிரஸ் எம்பி கோகோய் பிரதமரை மதிக்க வேண்டும். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மதித்து நடக்க வேண்டும் என பேசி இருந்தார். ஆனால் அந்த கார்ட்டூனில் பிரதமரின் கையில் விலங்கிட்டு காலில் செயினால் பூட்டப்பட்டு இருந்தது. இப்படி ஒரு போட்டோவுக்கு நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்களா? பிரதமரை அவமதிக்கும் ஒரு போட்டோவை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டுமா? அந்த கார்ட்டூன் தொடர்பான நடவடிக்கை சரிதான், இந்த விஷயத்தில் அனுதாபம் தேட முயற்சியா? தமிழகத்தில் முதல்வரை ஒரு வார்த்தை தவறாக யாராவது பேசினால் கூட அன்று இரவே அவர் கைது செய்யப்படுகிறார். மதுரை எம்பி வெங்கடேசன் இதற்கு பதில் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை