பச்சை பாம்புடன் ஒப்பிட்டு பேசிய நிதேஷ் ராணே Nitish Rane Speech about Hinduism| Maharashtra Ministe
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜவை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் நிதிஷ் ராணே பேசினார். மும்பையில் ஹிந்தி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே கட்சியினர், உருது மொழி பேசுவோர் மீது தனி பாசம் காட்டுகின்றனர். அப்பாவி ஏழை ஹிந்துக்களை குறிவைத்து தாக்கும் இவர்கள், முகமது அலி ரோடு, பேஹரம்பாடா போன்ற பகுதிக்கு சென்றால் சாதுவாக மாறிவிடுகின்றனர். ஹிந்துக்கள் ஓட்டளித்து தான் நான் எம்எல்ஏ ஆனேன். குல்லா போட்டிருப்போர் ஓட்டுப் போட்டு நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அப்படியிருக்கையில் நான் ஹிந்துக்களை ஆதரிக்காமல் உருது மொழி பேசுபவரையா ஆதரிப்பேன். அவர்கள் பச்சை பாம்புகள். மும்பையின் டிஎன்ஏவே ஹிந்து தான். ஹிந்தியை எதிர்த்து, மராத்திக்கு ஆதரவாக செயல்படுவது போல், தாக்கரே சகோதரர்கள் நாடகம் ஆடுகின்றனர் என ராணே பேசினார்