ஆந்திராவின் யோகி ஆதித்யநாத் ஆகும் பவன் | Pawan Kalyan | Yogi Adityanath
ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், தாம் ஒரு ஹிந்து என கூறுவதை பெருமையாக கருதும் தீவிர ஹிந்துத்வாவாதி. சமீபத்தில் ஆந்திரா உள்துறை அமைச்சர் அனிதாவை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. அனிதா சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருடைய உள்துறை அமைச்சகத்தை நான் எடுத்துக்கொள்வேன் என எச்சரித்து இருந்தார். இந்த பேச்சின்போது, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்தார் பவன். வன்முறையை எப்படி ஒடுக்குவது, கிரிமினல்களை எப்படி கையாளுவது என்பதை முதல்வர் யோகியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
நவ 17, 2024