/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் பிரமாண்ட கர்தவ்ய பவன் கட்டடம் | PM Modi | kartavya bhavan
1.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் பிரமாண்ட கர்தவ்ய பவன் கட்டடம் | PM Modi | kartavya bhavan
டில்லியில் 1950 மற்றும் 1970களில் கட்டப்பட்ட பழைய சாஸ்திரி பவன், கிருஷி பவன், உத்யோக் பவன், நிர்மாண் பவன் போன்றவற்றில் பல முக்கிய அமைச்சக அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்த கட்டடங்கள் பழுதான நிலையில், முக்கிய அமைச்சகங்களின் அலுவலகங்களை ஒரே இடத்தில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய பார்லிமென்ட் கட்டடம், துணை ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், இப்போது சில அமைச்சகங்களின் அலுவலகங்களை ஒரே இடத்தில் கொண்டுவரும், கர்தவ்ய பவன் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று இந்த பவனை திறந்துவைத்து, ஆய்வு செய்தார். கட்டடம் உருவாக காரணமாக இருந்தவர்களிடம் உரையாடினார்.
ஆக 06, 2025