அப்பா ராமதாஸ் அதிரடி அறிவிப்பு: கதி கலங்கிய அன்புமணி ஆதரவாளர்கள் PMK infight Ramadoss Anbumani who
பாமகவில் யாருக்கு அதிகாரம் என்பதில் அப்பா ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. கட்சி நிர்வாகிகளும், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பிற கட்சித் தலைவர்களும் எடுத்த அத்தனை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பிரச்னை இன்னும் ஓயவில்லை. பாமகவில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளை இழுக்க ராமதாசும், அன்புமணியும் போட்டி போட்டு வருகிறார்கள். அந்த முயற்சியில் ராமதாஸ் இன்று 16 அடி பாய்ந்திருக்கிறார். தன்னுடன் இருக்கும் நிர்வாகிகளுக்குத்தான் சட்டசபை தேர்தலில் சீட் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார். இது அன்புமணி பக்கம் இருக்கும் கட்சி நிர்வாகிகளின் தலையில் பேரிடியாக இறங்கியிருக்கிறது. எம்எல்ஏ அருளை கட்சியின் இணை பொதுச் செயலாளராக அறிவிப்பதாகவும் கூறி அன்புமணிக்கு அதிர்ச்சியளித்தார், ராமதாஸ். தன்னுடன் இருக்கும் கட்சியினருக்கு மட்டும்தான் சீட் கொடுப்பேன்; இதுவே என் கட்டளை என்கிற ரீதியில் ராமதாஸ் பேசியிருப்பதால், இப்போதைக்கு சண்டை ஓயாது; 2026 சட்டசபை தேர்தல் வரை நீண்டாலும் நீளும் என்ற பீதியை பாமகவினர் மத்தியில் உண்டாக்கியிருக்கிறது.