உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி; ஸ்டாலின் போட்ட பிளான் ponnmudi| admk| mkstalin| dmk| admk|

பொன்முடிக்கு மீண்டும் கட்சிப்பதவி; ஸ்டாலின் போட்ட பிளான் ponnmudi| admk| mkstalin| dmk| admk|

முதல்வர் ஸ்டாலின் திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். திமுகவில் ஏற்கனவே 5 துணைப் பொதுச்செயலாளர்கள் இருக்கும் நிலையில், கூடுதலாக 2 பேருக்கு பதவி வழங்க முடிவுசெய்தார். அதன்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, தற்போதைய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏற்கனவே இந்த பதவியில் இருந்தவர்தான். கடந்த ஏப்ரலில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சைவ, வைணவ மதங்களின் குறியீடுகளை விலைமாதர்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திமுகவினரே எதிர்த்தனர். எம்பி கனிமொழிகூட பொன்மொழியின் கொச்சையான பேச்சை கண்டித்து இருந்தார். கடுமையான எதிர்ப்புகளால் பொன்முடியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக திருச்சி சிவா எம்பிக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. அதன்பின், பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. தற்போது தேர்தல் நேரம் என்பதால், தலைமை மீதான பொன்முடியின் அதிருப்தியை குறைக்கவும், விழுப்புரத்தில் கட்சிப்பணிகளை துரிதப்படுத்தும் வகையிலும், 7 மாதங்களுக்கு பிறகு பொன்முடிக்கு மீண்டும் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதை விமர்சித்துள்ள அதிமுக, கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், பெண்களை மிகவும் கொச்சையாக, ஆபாசமாக பேசிய பொன்முடிக்கு கட்சிப்பதவியை பரிசாக வழங்கி திமுக அழகு பார்த்துள்ளது என கூறியுள்ளது. ஆபாசமாக, அவதூறாக, இன ரீதியாக இழிவுபடுத்தி பேசினால், பெயருக்கு பதவிநீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு, சில மாதங்களில் மீண்டும் அதே பதவி வழங்குவது திமுக-வின் பார்முலா. பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை செயல்படுத்துவதும்; பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுகவுக்கு துளியும் கவலை இல்லை என்பதும்தான் இதன் மூலம் தமிழக மக்களுக்கு திமுக சொல்லும் செய்தி என்று அதிமுக விமர்சித்துள்ளது.

நவ 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை