இரண்டே வாரத்தில் சரிந்த தங்கம் விலை: களைகட்டும் விற்பனை | Gold rate change | Price drop below ₹7000
ங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனி தங்கமே வாங்க முடியாது போல என்ற நிலைக்கு நடுத்தர மக்கள் சென்றுவிட்டனர். தீபாவளிக்கு 2 நாட்கள் முன்பு அதாவது அக்டோபர் 29-ம் தேதி, தங்கம் விலை ஒரு கிராம் 7,375 ரூபாயாகவும், சவரன் 59,000 ரூபாயாகவும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. தீபாவளி தினத்தன்று மேலும் விலை உயர்ந்து கிராம் 7,455- ரூபாய்க்கு விற்பனையானது. இனி தங்கம் விலை குறையாது என்றும் வரும் நாட்களில் ஒரு கிராம் 8000 ரூபாயை தாண்டும் எனவும் தகவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தான் கடந்த 6ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானது. டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பங்குகள் பக்கம் திருப்பினர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. டிரம்ப் வெற்றி பெற்ற மறுநாளே தங்கம் விலை கிராமுக்கு 165 குறைந்தது.