பழனிசாமி மீது 3வது அட்டாக்? இலைக்கு வைக்கப்பட்ட குறி | Sengottaiyan Rebellion |Two Leaves Symbol
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தமிழக அரசியலில் அதிர்வலையை உண்டாக்கியது. 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் தன்னை, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்காமல் நீக்கியது வருத்தம் அளிக்கிறது. இதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் கமிஷனுக்கு, அவர் கடிதம் அனுப்பி உள்ளார். நிலுவையில் உள்ள அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தை விசாரிக்க வேண்டும். பழனிசாமி தலைமையில் இருப்பது உண்மையான அ.தி.மு.க., அல்ல. கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., வகுத்த விதிகளை மீறி, பழனிசாமி பொதுச்செயலராகி உள்ளார். இது குறித்து உண்மை நிலையை நிரூபிக்க அவகாசம் தேவை என கடிதத்தில் செங்கோட்டையன் கூறியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். #AIADMKDrama #SengottaiyanVsEPS #TwoLeavesSymbol