உயிரை காப்பாற்றிய இந்தியாவுக்கு நன்றி: ஷேக் ஹசீனா உருக்கம் Sheikhhasina| Bangladesh
வங்க தேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் கலவரமானது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் இந்நிலையில் வங்கதேச மாணவர்கள் போராட்டம் முதல் அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தல் வரை பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஊடங்கள் கேள்விகளுக்கு ஷேக் ஹசீனா பதில் அளித்துள்ளார். இந்தியா எப்போதுமே வங்க தேசத்தின் மிக முக்கியமான நட்பு நாடு. வங்க தேசத்தின் பாதுகாப்பும், வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அது அப்படியே தொடர வேண்டும். இந்தியா மற்றும் வங்கதேச உறவில் விரிசல் இருந்தால் அதற்கு நான் காரணம் இல்லை. வங்கதேச இடைக்கால அரசை வழி நடத்திச் செல்லும் யூனுஸின் வன்முறை மற்றும் தீவிரவாத கொள்கைகள் தான் அதற்கு காரணம். சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், பிற்போக்கான மத மற்றும் சமூக கொள்கைகள், இந்தியாவுக்கு எதிரான வங்கதேச உயர் அதிகாரிகளின் பேச்சுகள் அதில் அடங்கும். இரு நாட்டுக்கு இடையிலான தொடர்பு ஆழமானது. பரந்துபட்டது. இந்தியாவின் நம்பகமான நாடாக இருப்பதில் எங்களுக்கு பெருமை. கடந்த ஆண்டு எனக்கு இந்தியாவில் ஒரு பாதுகாப்பான புகலிடம் தந்து என்னை காப்பாற்றினர். அதற்காக இந்திய மக்களுக்கு மிகவும் நன்றி. வங்க தேசத்தின் பழமையான கட்சி அவாமி லீக். அது தேர்தலில் பங்கேற்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் அமைப்பு மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயல். மக்கள் அவர்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டளிக்க கூடாது என தடுத்தால் அவர்கள் ஓட்டளிக்கவே மாட்டார்கள். வங்கதேச இடைக்கால அரசின் தடையை சட்டப்படியும், ஜனநாய முறைப்படியும் எதிர்கொள்வோம். கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்த பாதுகாப்பு படைகளுக்கு நான் அதிகாரம் அளிக்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை அரசின் நேரடி உத்தரவாக பார்க்க கூடாது. அந்த போராட்டத்தில் உயிர்களை இழந்ததற்காக நான் வருந்துகிறேன். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டேன். ஆனால் யூனுஸ் நிர்வாகம் ஆட்சிக்கு வந்த முதல் நாளே அந்த விசாரணையை ரத்து செய்தது என ஷேக் ஹசீனா கூறினார். #SheikhHasina #Bangladesh #ExPM #BangladeshPolitics #SheikhHasinaLegacy #PoliticalLeader #WomenInLeadership #SouthAsia #BangladeshNews #Leadership #BNP #AwamiLeague