நேற்று ஐகோர்ட் அதிரடி; இன்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவு: சித்தராமையாவுக்கு சிக்கல்! | Special Court
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி. அவருக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) அரசு திட்டத்துக்காக கையகப்படுத்தியது. அதற்கு பதில் முதல்வர் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை கர்நாடக அரசு ஒதுக்கியது. பார்வதி அரசுக்கு அளித்த நிலத்தின் மதிப்பைவிட, அவர் பெற்ற 14 வீட்டுமனைகளின் மதிப்பு பல மடங்கு அதிகம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சமூக ஆர்வலர்கள் சிலர் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய, கவர்னர் தாவர் சந்த் கெலாட்டிடம் Thawar Chand Gehlot அனுமதி கேட்டனர். ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க கவர்னர் அனுமதி அளித்தார்.