உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேஜஸ்வி தலைமையில் உரிமை பேரணி: பீகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் Tejaswi Yadav Begins Bihar Ad

தேஜஸ்வி தலைமையில் உரிமை பேரணி: பீகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் Tejaswi Yadav Begins Bihar Ad

லோக்சபா மற்றும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜ ஓட்டு திருட்டில் ஈடுபட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் கமிஷன் நடத்திய வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் குளறுபடி நடந்துள்ளதாகவும் ராகுல் கூறி வருகிறார். உயிரிழந்தோர், நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தோர், இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களுக்காக, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் கூறும் நிலையில், இது பாஜவுக்கு ஆதரவான ஓட்டு திருட்டு நடவடிக்கை என, ராகுல் பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார். தேர்தல் கமிஷன் பாஜவின் கூட்டாளி போல் நடந்து கொள்வதாகக் கூறி, பீகாரின் 20 மாவட்டங்களில் ராகுல் பேரணி நடத்தினார். ஓட்டர் அதிகார் யாத்ரா அதாவது, வாக்காளர் உரிமை பேரணி என்ற பெயரில் 1300 கிமீ நடத்தப்பட்ட இந்த பேரணியில் மத்திய, மாநில அரசுகள், தேர்தல் கமிஷன் ஆகியவற்றின் செயல்பாடுகளை கடுமையாக சாடினார். ராகுல் தலைமையில் நடந்த பேரணியில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வியும் பங்கேற்று, மத்திய, மாநில பாஜ அரசுக்கு எதிராக பரபரப்பாக பேசினார். ராகுல் தலைமையிலான முதல் கட்ட பேரணி நிறைவடைந்துள்ள நிலையில், ஆர்ஜேடி தலைவர் தேஸ்வி, இன்று தனது தலைமையில் புதிய பேரணியை துவங்கினார். இதற்கு பீகார் அதிகார் யாத்ரா அதாவது பீகார் உரிமை பேரணி என பெயர் வைத்துள்ளார். ஆனால் ராகுலின் ஓட்டு திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு பதில், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளார் தேஜஸ்வி. ராகுலின் பேரணி நடக்காத மீதமுள்ள 18 மாவட்டங்களில் தேஜஸ்வியின் பேரணியை முதலில் நடத்தி முடிக்கவும் ஆர்ஜேடி திட்டமிட்டுள்ளது. அதன் பின் இந்த பேரணியை மாநிலம் முழுதும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர். பீகார் மக்களின் உரிமை, இளைஞர்களின் வேலை வாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி இந்த பேரணி நடக்கும் என, ஆர்ஜேடி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஜெகானாபாத், பெகுசராய், ககாரியா, மாதேபுரா உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேஜஸ்வி சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணி வலுவாக உள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி எந்த சர்ச்சையும் கிடையாது. தொகுதி பங்கீடு சுமுகமாக முடியும். 243 தொகுதியிலும் நான் தான் வேட்பாளர் என்ற வகையில் ஆர்ஜேடி தொண்டர்கள் ஓட்டளிக்க வேண்டும், என தேஜஸ்வி கூறினார். #BiharAdhikarYatra| #TejaswiYadav| #RJD| #BiharPolitics| #Congress| #IndiAlliance|

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை