தளவாய் சுந்தரத்தின் கட்சிப்பதவி பறிப்பு ஏன்? | Thalavai Sundaram | EPS | palanisamy | admk
எம்எல்ஏ தளவாய் சுந்தரத்தின் பதவிகளை பறித்தார் இபிஸ்! இதுதான் காரணமா? கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் வகித்து வந்த கட்சி பதவிகளை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பறித்துள்ளார். அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளார். கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் தளவாய் சுந்தரம் நடந்து கெண்டுள்ளார். அது பற்றி விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கட்சி பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக பழனிசாமி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவர் தளவாய் சுந்தரம். 2001, 2021 தேர்தல்களில் எம்எல்ஏவாக தேர்வாகி இருக்கிறார். அதிமுகவின் ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் பதவி வகித்தவர். கடந்த 6ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. கன்னியாகுமரியில் ஈசாந்திமங்கலத்தில் தொடங்கி பூதப்பாண்டி வரை அணிவகுப்பு நடந்தது.