உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்காவை பணக்கார நாடாக்க டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Trump Tariffs Announcements | Amer

அமெரிக்காவை பணக்கார நாடாக்க டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Trump Tariffs Announcements | Amer

எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு சதவீதம் வரி? இந்தியாவுக்கு எவ்வளவு அறிவித்தார் டிரம்ப் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பொருள்களுக்கு பரஸ்பரம் அதே அளவு வரி விதிப்போம் என அறிவித்து இருந்தார். அதன் படி பல்வேறு நாடுகளில் இறக்குமதிக்கான வரி விகித்தை டிரம்ப் அறிவித்து உள்ளார் . இதில் பிற நாடுகளுக்கு எவ்வளவு சதவீத வரி என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசியதாவது, இன்று அமெரிக்காவின் விடுதலை நாள். பிற நாடுகள் அதிகமான வரிகளை விதிப்பதால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் அதற்கு நிகராக பிற நாடுகளுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும். இந்த வரி விதிப்புகள் முழுமையாக பரஸ்பரம் இல்லை, ஓரளவுதான். அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக ஆக்குவோம் என்றார். டிரம்ப் அறிவித்த புதிய வரிவிதிப்பு ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்துள்ளார். அதிகபட்சமாக லெசோத்தோ மற்றும் செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் 50%, கம்போடியா 49%, லாஸ் 48%, மடகாஸ்கர் 47 %, வியட்நாம் 46%, இலங்கை 44% என வரி விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வர்த்தக போர் துவங்கி உள்ள சீனாவுக்கு 34 % வரி விதிக்கப்பட்டு உள்ளது. டர்கி, சீலி, கம்போடியா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு அவர்கள் விதிக்கும் பரஸ்பர 10 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.

ஏப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி